COLOMBO VIVEKANANDA COLLEGE
சீரையணி தாய் தந்தை செய் தவத்தால், செம்மையுறு வாழ்வுதனைச் செகத்திற் கண்ட எமது பாடசாலையின் அந்நாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், தம்மிடையேயான நட்புறவின் செழிப்பை என்றென்றும் நினைவிற் கொள்வர். அதன் வெளிப்பாடாக தோற்றம் பெற்ற இவ்வமைப்பு அனைத்து நன்னெஞ்சங்களது உறுதுணையையும் வாஞ்சையுடன் வேண்டி நிற்கின்றது. நாளைய பழைய மாணவர்களாகிய இன்றைய புதிய மாணவர்களும், நேற்றைய புதிய மாணவர்களாகிய இன்றைய பழைய மாணவர்களும் ஒருங்கிணையும் இச் சந்தர்ப்பமானது உறுநட்பு துளிர்ப்பதற்கான ஏது நிலையை கோடிகாட்டி நிற்கின்றது. இங்கு துளிர்க்கும் நட்பினால் முகிழ்க்கும் உறவுப் பாலம் உங்கள் வாழ்வில் வசந்தத்தை மலரச் செய்யட்டும்.
What is rarer to get than friendship
And a stronger shield against a foe?
Friendship regains there where, ever the same,
It gives every help.